மானியத்தில் தேனீ ெபட்டி, தேன் பிழியும் கருவி


மானியத்தில் தேனீ ெபட்டி, தேன் பிழியும் கருவி
x

விவசாயிகள் இணைத் தொழிலாக தேனீ வளர்த்து வருமானம் ஈட்ட மானியத்தில் தேனீ ெபட்டி, தேன் பிழியும் கருவி பெறலாம் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

தெற்குத்தரவை,

விவசாயிகள் இணைத் தொழிலாக தேனீ வளர்த்து வருமானம் ஈட்ட மானியத்தில் தேனீ ெபட்டி, தேன் பிழியும் கருவி பெறலாம் என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ஆய்வு

ராமநாதபுரம் யூனியனுக்கு உட்பட்ட தெற்குத்தரவை கிராமத்தில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள செயல் விளக்கத்திடலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் தேனீக்கள் வாயிலாக மகரந்த சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் தேனீ வளர்ப்பு பெட்டி மற்றும் தேன் பிழிந்து எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. இதனை வாங்கும் விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதன்படி 150 தேனீப்பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற குறைந்தது 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அந்த விவசாய நிலத்தில் பல்லாண்டு பயிர்களான மா, கொய்யா போன்ற பழமரங்கள், முந்திரி போன்ற தரிசு நில பயிர்கள் இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு குறைந்தது 10 முதல் 50 தேனீப்பெட்டிகள், ஒரு தேன் பிழிந்து எடுக்கும் கருவி வழங்கப்படும். 10 தேனீப்பெட்டி மற்றும் ஒரு கருவியின் விலை ரூ.60 ஆயிரம். அதில் 40 சதவீதம் ரூ.24 ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் தெற்குத்தரவை கிராமத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கு 10 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது. இவர் 400 தேனீ பெட்டிகளை பராமரித்து வருகிறார். தேனீ வளர்ப்பு மற்றும் பாராமரிப்புக்காக ரூ.2.4 லட்சம் செலவு செய்துள்ளார்.

வருமானம்

தேன் மகசூல் மூலம் ரூ.2.2 லட்சம் வருமானம் பெற்று உள்ளார்.மேலும் 100 பெட்டிகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.2.2 லட்சம் வருமானம் பெற்றுள்ளார். இதன் மூலம் இதுவரை ரூ.3.4 லட்சம் வருமானம் ஈட்டி உள்ளார். இவ்வாறு கூறினார்.


Related Tags :
Next Story