பீடி, சுருட்டு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பீடி, சுருட்டு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பீடி, சுருட்டு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத சட்ட விரோத பீடி உற்பத்தியை தடுத்து நிறுத்த வேண்டும். பீடிக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத வரியை குறைக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 1,000 பீடிகளை சுற்றுவதற்கு அடிப்படை சம்பளம் ரூ.395 என உயர்த்தி வழங்க வேண்டும். பீடி சுற்றும் தொழிலாளர்களின் வீடு கட்டும் திட்டம், கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சேமநல திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பீடி, சுருட்டு தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சித்தாராபேகம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், கமால்தீன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Related Tags :
Next Story