பீடி தொழிலாளர்கள் போராட்டம்


பீடி தொழிலாளர்கள் போராட்டம்
x

நெல்லையில் பீடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரியும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தரமான பீடி இலை, போனஸ், லீவு சம்பளம் சட்டப்படி வழங்க வேண்டும், பீடித்தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை பி.எப். அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை டவுனில் உள்ள பீடி நிறுவன தலைமை அலுவலகத்தில் மாவட்ட ஜனநாயக பீடித்தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார்.

கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சங்கரபாண்டியன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் அன்புசெல்வி, செய்யது அலி பாத்திமா, மாரியம்மாள், பூமாரி, சத்யா, சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினா். கிளை நிர்வாகிகள் வள்ளி, பிச்சம்மாள், கிருஷ்ணவேணி, ராஜேஸ்வரி உள்பட பீடித்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story