வனப்பகுதியில் பீன்ஸ் சாகுபடியில் மலைவாழ் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


வனப்பகுதியில் பீன்ஸ் சாகுபடியில் மலைவாழ் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
x

வனப்பகுதியில் பீன்ஸ் சாகுபடியில் மலைவாழ் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர்

தளி,

வனப்பகுதியில் பீன்ஸ் சாகுபடியில் மலைவாழ் மக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மலைவாழ் மக்கள்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை மலைவாழ் மக்கள் ஆறுகள் மூலமாக பூர்த்தி செய்து கொள்கின்றனர். நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை, பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய், நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு, தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. அதுமட்டுமின்றி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுயதொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து குறைந்து போனதால் மலைவாழ் மக்களால் விவசாயத் தொழிலில் ஈடுபட முடியவில்லை. மேலும் சுய தொழிலுக்கு உதவிகரமாக இருந்த தைலப்புற்கள், சீமாறு தயாரிக்க பயன்படும் கீற்றுகள் வறட்சியின் காரணமாக கருகிவிட்டன.

பீன்ஸ் சாகுபடி

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் ஓரளவிற்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் நிலத்தை உழவு செய்து பீன்ஸ் சாகுபடி செய்துள்ளனர். தற்போது செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து பூவும் பிஞ்சுமாக உள்ளது. அதை பராமரிப்பு செய்து விளைச்சலை ஈட்டுவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.அத்துடன் குடிநீர், பாசனத்திற்கான தண்ணீர் பஞ்சமும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story