கலெக்டர் அலுவலகம் முன்புவிவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சங்கரசுப்பு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலவன், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் ஆகியோர் பேசினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், தர்மர், முனீஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாட்கள் வேலையும், சட்டக்கூலி ரூ.281-ம் வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 100 நாட்கள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். 60 வயதானவர்களுக்கு நிபந்தனையின்றி முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.