கலெக்டர் அலுவலகம் முன்புபா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பா.ஜ.க. முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பா.ஜ.க. முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாவட்ட தலைவர் வினோத்குமார், பா.ஜ.க. நகர தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story