கலெக்டர் அலுவலகம் முன்புகருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கமீனா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை சத்துணவு ஊழியர்களின் கல்வித் தகுதியை கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story