கலெக்டர் அலுவலகம் முன்புவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமன் தலைமை தாங்கினார். முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் பால் பாண்டி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயிகள் பாதிப்படையும் வகையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 என்ற சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story