மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்புதொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் வாயிற்கூட்டம்


மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்புதொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் வாயிற்கூட்டம்
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.

தேனி

தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது. ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவதை முன்னிட்டு இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மின்வாரிய தொழிலாளர் சம்மேளன செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். எம்ப்ளாயீஸ் பெடரேசன் சங்க தலைவர் மூக்கையா, ஐக்கிய தொழிலாளர் சங்க தலைவர் சீனிவாசன், தேசிய தொழிலாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் ரத்தினம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

1 More update

Related Tags :
Next Story