கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு இந்து முன்னணி முற்றுகை போராட்டம்


கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு   இந்து முன்னணி முற்றுகை போராட்டம்
x

கோபி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு இந்து முன்னணியினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டாா்கள்.

ஈரோடு

கடத்தூர்

கோபி ஆர்.டி.ஓ அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென இந்து முன்னணி நிர்வாகிகள், புதிய இடங்களில் தமிழக அரசு விநாயகர் சிலை வைப்பதற்கு தடை விதிப்பதை கண்டித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு விநாயகர் சிலைகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் தாங்களாகவே கலைந்து ெசன்றார்கள்.

1 More update

Related Tags :
Next Story