ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடக்கம்


ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடக்கம்
x

ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

அரியலூர்

தா.பழூர்:

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தம்பாடி ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், தென்கச்சி பெருமாள் நத்தம் ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சாத்தம்பாடி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், தென்கச்சிபெருமாள் நத்தம் ஊராட்சியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்குமார் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் நடைபெற உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்புமனு வினியோகம் மற்றும் வேட்புமனுவை பெறுவதற்காக தயார் நிலையில் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய முதல் நாளான நேற்று சாத்தாம்பாடி ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் வேட்புமனு பெற்றுச் சென்றுள்ளனர். தென்கச்சிபெருமாள்நத்தம் ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனுக்கள் பெற்று செல்லவில்லை. தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.


Next Story