பெர்சிமன் பழ சீசன் தொடக்கம்


பெர்சிமன் பழ சீசன் தொடக்கம்
x
தினத்தந்தி 5 Aug 2023 2:00 AM IST (Updated: 5 Aug 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழ பண்ணையில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழ பண்ணையில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெர்சிமன் பழம்

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளது. இங்கு பழ பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் அரிய பழ மரமான பெர்சிமன் மற்றும் பேரிக்காய், ஆரஞ்சு, பிளம்ஸ், லிச்சி உள்ளிட்ட பழ மரங்கள் உள்ளன. இதில் பெர்சிமன் பழத்தின் தாயகரம் ஆஸ்திரேலியா நாடு ஆகும். இந்த பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாக உள்ளது. பெர்சிமன் பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இந்த பழத்தை மரத்தில் இருந்து பறித்து நேரடியாக சாப்பிட முடியாது. பழத்தை ஒரு நாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊற வைத்து கழுவி, அதன் பின்னரே சாப்பிட வேண்டும். பெர்சிமன் பழம் மருத்துவ குணம் உடையது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது.

கிலோ ரூ.180-க்கு விற்பனை

பெர்சிமன் பழ சீசன் ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் வரை இருக்கும். குன்னூரில் நிலவும் தட்ப வெப்பநிலை பெர்சிமன் மரம் வளர ஏற்றதாக உள்ளது. தற்போது குன்னூர் பழ பண்ணையில் பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. பணியாளர்கள் பழங்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். பெர்சிமன் பழம் கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பழ பண்ணைக்கு நேரடியாக வந்து இந்த பழங்களை வாங்கி கொள்ளலாம் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


Next Story