பா.ஜனதாவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தையா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்


பா.ஜனதாவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தையா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
x

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், ராஜ்யசபா எம்.பிக்கள் உள்ளனர். அதனால், ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என்று நாங்கள் எங்கள் உரிமையை கேட்டிருக்கிறோம் என்று பிரேமலதா கூறினார்.

சென்னை,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தே.மு.தி.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,சென்னை கோயம்பேட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

அதன்பிறகு, பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் அரசியலில் கட்சிகள் கூட்டணி வைப்பது இயற்கை. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தனர். தே.மு.தி.க. சார்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், ராஜ்யசபா எம்.பிக்கள் உள்ளனர். அதனால், ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என்று நாங்கள் எங்கள் உரிமையை கேட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தைக்கு அழைத்தவர்கள் நல்ல செய்தி வரும் என்று கூறியுள்ளனர். நாங்கள் பா.ஜனதாவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பா.ஜனதா எங்களுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள். எங்களின் எடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஒரு வார காலத்துக்குள்ளாக தெரிவிக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குரியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story