சிறந்த சமூக சேவகர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


சிறந்த சமூக சேவகர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறந்த சமூக சேவகர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விரும்புபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை, கலை, அறிவியல், பண்பாடு, நிர்வாகம் போன்ற துறைகளில் தொடர்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். விருப்பம் உடையவர்கள் தமிழக அரசின் இணையதள முகவரியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து அதன் 2 நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சிவகங்கையில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழங்க வேண்டும்

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story