தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டி


தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டி
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகள் நடந்தன. போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பூங்கொடி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் கருப்பசாமி வரவேற்று பேசினார்.

இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாணவர் அமைப்பு தலைவர் குமரன், செயலாளர் ஷிவானி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.


Next Story