செகந்திராபாத் - கொல்லம் இடையேசேலம் வழியாக சிறப்பு ரெயில்


செகந்திராபாத் - கொல்லம் இடையேசேலம் வழியாக சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:17 AM IST (Updated: 26 Aug 2023 1:35 PM IST)
t-max-icont-min-icon

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத்- கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்நாளை முதல் இயக்கப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்

ஒணம் பண்டிகை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செகந்திராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ரெயில் (07121) நாளை (ஞாயிற்றுக்கிழமை) செகந்திராபாத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் (28-ந் தேதி) காலை 11.38 மணிக்கு சேலம் வந்தடையும்.

இங்கிருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன், கோட்டையம் வழியாக இரவு 11.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில்...

இதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07122) வருகிற 29-ந் தேதி (ெசவ்வாய்க்கிழமை) கொல்லத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டையம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 5.07 மணிக்கு சேலம் வந்தடையும்.

இங்கிருந்து 5.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர் வழியாக இரவு 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த தகவலை சேலம் ெரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

1 More update

Next Story