பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா
திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திண்டுக்கல் மலையடிவாரத்தில் பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா சாமி சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. அதன்பிறகு இரவு 7 மணி அளவில் சாமி சாட்டுதல் நடைபெற்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது. நாளை மறுநாள் பூச்சொரிதல் விழா நடக்கிறது.
இந்த திருவிழாவில் வருகிற 28-ந்தேதி மாலையில் அம்மனின் கரகம் ஜோடித்தல், மின்தேர் வீதிஉலாவும், 29-ந்தேதி பால்குடம் ஊர்வலம், 30-ந்தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல் நடக்கிறது. பின்னர் அடுத்த மாதம் 1-ந் தேதி (திங்கட்கிழமை) பூக்குழி இறங்குதல், 2-ந்தேதி கொடியிறக்கம் நடக்கிறது. 3-ந்தேதி மஞ்சள் நீராட்டு, 4-ந்தேதி ஊஞ்சல் உற்சவம், 5-ந்தேதி தெப்ப திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.