பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல் அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடி ஊராட்சி கோடாங்கிநாயக்கன்பட்டியில் பகவதியம்மன், காளியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, வேதபாராயணம், யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 6 மணிக்கு விஸ்வசேனை வழிபாடு, நாடிசந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகிய பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோபுர கலசங்களில் மேட்டுக்கடை திருவேங்கடஜோதி பட்டாசாரியார் தலைமையிலான குருக்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க அம்மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் கோடாங்கிநாயக்கன்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்