பகவதி அம்மன் கோவில் திருவிழா
நத்தத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
திண்டுக்கல்
நத்தம் அசோக் நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி சந்தனக்கருப்பு சாமி கோவிலிலிருந்து கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் மேளதாளம் முழங்க கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப் பட்டது. 108 திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அக்கினிசட்டி, பால்குடம், சந்தனகுடம் எடுத்து வந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலத்தை தொடர்ந்து மின்ரதத்தில் பகவதி அம்மன் வீதி உலா வந்தார். பின்னர் அரண்மனை பொங்கல் வைத்தல், மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா மற்றும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story