பைரவாஷ்டமி வழிபாடு
பைரவாஷ்டமி வழிபாடு நடந்தது.
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவிலில் சம்கார பைரவருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பைரவர் சன்னதி முன்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் மூலவர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire