பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி இன்று முதல் தெலுங்கானாவில் நடைபயணம்


பாரத் ஜோடோ யாத்திரை:  ராகுல் காந்தி இன்று முதல் தெலுங்கானாவில் நடைபயணம்
x

காலை 10 மணியளவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தெலுங்கானா மாநிலத்தை சென்றடைய உள்ளது. இன்று முதல் தெலுங்கானாவில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.

ஐதராபாத்,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கினார். அந்த பாதயாத்திரை கேரளாவுக்கு சென்று, 19 நாட்கள் நடைபெற்றது. அதன்பிறகு, கடந்த மாதம் 30-ந் தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது. அன்றைய தினம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

பின்னர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரியில் 15 நாட்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கடந்த 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் ஆந்திராவில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ராகுல்காந்தியின் பாதயாத்திரை மீண்டும் கர்நாடகத்திற்கு வந்தது. அதாவது கர்நாடக மாநில எல்லையில் உள்ள ராய்ச்சூரில் நேற்று முன்தினம் பாதயாத்திரை நடத்தினார்.

நேற்று கர்நாடகத்தில் 17-வது நாளாக ராய்ச்சூர் மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டார். ராகுல்காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு ராய்ச்சூர் மாவட்டம் பி.எச்.இ.எல். அலுவலகத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினார். காலை 10 மணியளவில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தெலுங்கானா மாநிலத்தை சென்றடைய உள்ளது. இன்று முதல் தெலுங்கானாவில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.


Next Story