பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாரதியார் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஆசிரியர் ஜெயந்தி வரவேற்று பேசினார். விழாவில் பாரதியார் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினார்கள். இதை தொடர்ந்து கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி மாணவர்கள் பாரதியார் குறித்த கட்டுரைகள், கவிதைகளை வாசித்தனர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






