பாரதிதாசன் பல்கலைக்கழக செஸ் போட்டி: திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன்


பாரதிதாசன் பல்கலைக்கழக செஸ் போட்டி: திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன்
x

பாரதிதாசன் பல்கலைக்கழக செஸ் போட்டியில் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் செஸ் போட்டி, திருச்சி காவேரி கல்லூரியில் நடந்தது. இதில் 8 மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். 6 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் முடிவில் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் 21 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன், சாம்பியன் பட்டத்தை வென்றனர். 17.5 புள்ளிகள் பெற்ற நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி 2-வது இடத்தையும், திருச்சி ஜமால்முகமது கல்லூரி 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. இந்த போட்டிகள் முடிந்த பின்னர் தென் மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கான தேர்வு போட்டி நடந்தது. இந்த போட்டியின் முடிவில் மாணவிகள் கமலி, சத்தியபிரியா, சக்திஸ்ரீ, ஜீவிகா, ஜான்சிபாரதி, பவதாரிணி ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story