பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் சீர்காழியில் நடந்தது
சீர்காழி:
சீர்காழி தென்பாதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வட்டச் செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். திட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். நாகை வட்ட பொருளாளர் சீனிவாசன் வரவேற்றார். மாநில தலைவர் பழனி, மகளிர் அணி செயலாளர் ஜாக்குலின் மேரி, திட்ட பொருளாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பேசினர்.
தமிழக அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். மின்சாரத் துறையில் காலியாக உள்ள 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சரண்டர் விடுப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.முடிவில் சீர்காழி கோட்ட செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.