பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம்


பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம்
x

வள்ளியூரில் பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் வள்ளியூர் நம்பியான்விளை அருகே உள்ள இந்திரா பூங்காவில் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜகண்ணன், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டார். மாநில செயற்குழு உறுப்பினர் சாந்திராகவன், மாவட்ட பொது செயலாளர்கள் அருள்காந்தி, பாபுதாஸ், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கூத்தங்குழி பார்த்திபன் தலைமையில் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


Next Story