பவானி ஆற்றில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு
பவானி ஆற்றில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு
கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம்,
பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருவி அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையை பொறுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று காலை காலை 8 மணிக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
அணையின் நீர்மட்டத்தை சீராக வைத்திருப்பதற்காக அணையில் இருந்து வினாடிக்கு 17,060 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story