ரூ.16¼ கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்த பூமி பூஜை


ரூ.16¼ கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்த பூமி பூஜை
x

ராசிபுரத்தில் ரூ.16¼ கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்த பூமி பூஜை; அமைச்சர், எம்.பி. தொடங்கி வைத்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் ரூ.16.28 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு சாலை அகலப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தனர்.

ராசிபுரம் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, உட் கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலையான மல்லியகரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் காக்காவேரி முதல் கோனேரிப்பட்டி ஏரிக்கரை வரையும், கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் முதல் ஆண்டகளூர்கேட் வரையும் குருசாமிபாளையத்தில் இருந்து பொன்குறிச்சி வரை என ரூ.16.28 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படஉள்ளது.

நிகழ்ச்சியில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் சந்திரா சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், அருளரசன், தி.மு.க. ஒன்றிய பொருளாளர் ரவி என்கிற முத்துச்செல்வன், பேரூராட்சி தலைவர்கள் பிள்ளாநல்லூர் சுப்பிரமணியம், பட்டணம் நல்லதம்பி, அத்தனூர் பேரூராட்சி துணைத்தலைவர் கண்ணன், குருக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர், உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் உள்பட அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story