ரூ.43 லட்சத்தில் பொருட்கள் மீட்பு மையம் கட்டும் பணிக்கு பூமிபூஜை


ரூ.43 லட்சத்தில் பொருட்கள் மீட்பு மையம் கட்டும் பணிக்கு பூமிபூஜை
x

ரூ.43 லட்சத்தில் பொருட்கள் மீட்பு மையம் கட்டும் பணிக்கு பூமிபூஜை

நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 43 லட்சம் செலவில் பொருட்கள் மீட்பு மையம் கட்டும் கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வேதாரண்யம் நகராட்சியில் குப்பைகளை மக்கும், மக்கா குப்பை என தரம் பிரித்து அதில் உள்ள பிளாஸ்டிக் டயர் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து அதில் வைப்பதற்காக இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் புகழேந்தி கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், தூய்மை திட்ட அலுவலர் கல்யாணி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story