நகராட்சி பகுதியில் ரூ.64 லட்சத்தில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

குளித்தலை நகராட்சி பகுதியில் ரூ.64 லட்சத்தில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட நூலகம் முதல் ெரயில்வே கேட் வரை உள்ள சாலையில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணி, அம்ருத் திட்டத்தின் கீழ் அண்ணா நகர் பகுதியில் ரூ.34 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதேபோல பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் பப்பக்காபட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரிய மலையாண்டிப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதுபோல பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை அவர் வழங்கினார்.
இதில், குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், கூட்டுறவு சங்க அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.