ரூ.57 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமிபூஜை
கொசவப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.57 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
திண்டுக்கல்
15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டி வட்டார மருத்துவமனை வளாகத்தில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிதாக ஆய்வகம், அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூைஜ நடந்தது. விழாவுக்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை தாங்கி, கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
இதில் சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார், தி.பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சலேத்மேரி, தி.மு.க. மகளிர் தொண்டர் அணி மாவட்ட தலைவர் பாப்பாத்தி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய பொருளாளர் ஜான்பீட்டர், சாணார்பட்டி ஒன்றிய பொறியாளர் பிரிட்டோ, சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், சிவக்குமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story