ரூ.27 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை


ரூ.27 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிடங்கல் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கிடங்கல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பழகன் தலைமை தாங்கினார், வட்டார வளர்ச்சி ஆணையர் மீனா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி கலந்துகொண்டு பள்ளி வகுப்பறை புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story