நவீன பஸ்நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்பு


நவீன பஸ்நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை; அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x

பாளையங்கோட்டையில் நவீன பஸ்நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. இதில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பங்கேற்றாா.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை கதீட்ரல் பள்ளி அருகில் நன்கொடையாளர்கள் பங்களிப்பு மூலம் நவீன பஸ் நிறுத்தம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, மண்டல உதவி ஆணையாளர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story