சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை
சுகாதார வளாகம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சி 36 -வது வார்டு பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டி தரக்கோரி கவுன்சிலர் சிவகாமி, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி ஆகியோரிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று அண்ணாநகர் பகுதியில் புதிதாக ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் சிவகாமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் கலந்து கொண்டு சுகாதார வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, வார்டு செயலாளர் ஆறுமுகம், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story