திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்ட பூமி பூஜை


திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்ட பூமி பூஜை
x
தினத்தந்தி 6 April 2023 7:00 PM GMT (Updated: 6 April 2023 7:01 PM GMT)

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டுவதற்கு பூமிபூஜை நடந்தது.

தேனி

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் ரூ.3 கோடியே 40 லட்சத்தில் திருமண மண்டபம் மற்றும் ரூ.1 கோடியே 16 லட்சத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான அடிக்கல்லை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வீரபாண்டி புதுப்பாலம் அருகே திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். இதில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்செல்வன், வீரபாண்டி பேரூராட்சி தலைவி கீதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், கே.என்.ஆர் கட்டுமான நிறுவன இயக்குனர்கள் நாகராஜன், அபராஜிதன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story