புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை

புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
சாத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னகொல்லப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் புதிய ரேஷன் கடை வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து யூனியன் தலைவர் நிர்மலாகடற்கரையின் முயற்சியால் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் செலவில் அங்கு புதிய ரேஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து அங்கு புதிய ரேஷன் கடைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், காமேஸ்வரி, பஞ்சாயத்து தலைவர் செல்விசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






