நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட பூமி பூஜை


நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட பூமி பூஜை
x

நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட பூமி பூஜை

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி கோட்டப்பாடி (குரும்பூர்) கிராமத்தில் புதிதாக கட்டப்பட உள்ள நபார்டு வங்கி உதவியுடன் ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட பூமி பூஜை நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார ஆத்மா குழுத்தலைவர் செல்வ செங்குட்டுவன், ஊராட்சி மன்ற தலைவர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story