அகர்பத்தி உற்பத்தியாளர்கள் குழும கட்டிடம் கட்ட பூமி பூஜை


அகர்பத்தி உற்பத்தியாளர்கள் குழும கட்டிடம் கட்ட பூமி பூஜை
x

ஜோலார்பேட்டை அருகே அகர்பத்தி உற்பத்தியாளர்கள் குழும கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகர்பத்தி தயாரிப்பில் 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இதனால் அகர்பத்தி தொழிலை மேம்படுத்த திருப்பத்தூர் பகுதியில் அகர்பத்தி குறுந்தொழில் குழுமம் அமைக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட அகர்பத்தி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் அகர்பத்தி குழுமம் அமைக்க 80 சதவீத மானியத்துடன் குழுமம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமோட்டூரில் அகர்பத்தி உற்பத்தியாளர்கள் குழுமத்தின் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஆடிட்டர் சி.சுரேஷ்குமார் கலந்துகொண்டார். இதில் இயக்குனர்கள் சி.ரங்கநாதன், எஸ்.பாபு, எஸ்.கோபிநாத், விஜயகுமார் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


Next Story