ரேஷன் கடை கட்ட பூமி பூஜை


ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி நகராட்சி பகுதிகளில் ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடந்தது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பாலன் நகரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கும், 26-வது வார்டு காட்டு பரமக்குடியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கும், 21-வது வார்டு ஓட்டப்பாலம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை ஆகியவை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. இதற்கு நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பூமி பூஜை செய்தார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி ராஜு, மாரியம்மாள் மும்மூர்த்தி, ராதா பூசத்துரை, பிரபா சாலமன், தி.மு.க. நகர் மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன், வார்டு செயலாளர் வாணிகுமார், சோலை செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story