விக்கிரவாண்டியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை புகழேந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


விக்கிரவாண்டியில்    கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை    புகழேந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

விக்கிரவாண்டியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணியை புகழேந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.10 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் வரவேற்றார். துணை பதிவாளர் (பால்வளம), நாகராஜ் சிவகுமார், ஆவின் பொது மேலாளர் ரமேஷ்குமார், டாக்டர் சுப்புராஜ், முதுநிலை ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

இதில் துணை தலைவர்கள் பாலாஜி, சங்கர், பால் உற்பத்தியாளர் நல சங்க மாவட்ட தலைவர்அரிகரன், முன்னாள் இயக்குனர் தண்டபாணி, தி.மு.க. நகர செயலாளர் நைனா முகமது, ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட துணை அமைப்பாளர் பாபு ஜீவானந்தம், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் சர்கார் பாபு, பேரூராட்சி கவுன்சிலர்கள் சுபா சிவஞானம், சுதா பாக்கியராஜ், நிர்வாகிகள் திலகர், பிரசாந்த், கங்காதரன், சித்ரா கோவிந்தன், கார்த்திக், யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story