தத்தனூரில் ரூ.20 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை


தத்தனூரில் ரூ.20 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை
x

தத்தனூரில் ரூ.20 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி காலனி தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமான சாலையை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். எனவே இந்த சாலையை தார் சாலையாக மாற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தத்தனூர் கிராம மக்களின் 50 ஆண்டுகால கனவு நிறைவேறியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story