பரமக்குடியில் ரூ.1.80 கோடியில் அறிவுசார் மையம் கட்ட பூமிபூஜை


பரமக்குடியில் ரூ.1.80 கோடியில் அறிவுசார் மையம் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் ரூ.1.80 கோடியில் அறிவுசார் மையம் கட்ட பூமிபூஜை நடந்தது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. துணை தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் மீரா அலி வரவேற்றார்.

பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்துகொண்டு கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சுரேஷ், நகர் மன்ற உறுப்பினர் குணா தேவி, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருப்பையா, வார்டு செயலாளர் வேலவன், நிர்வாகிகள் சேது முருகன், தர்மன், பிஜூபாஸ்கரன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story