தார்சாலை, கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை


தார்சாலை, கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
x

பரமத்திவேலூர் வட்டாரத்தில் தார்சாலை, கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட மாதேசம்பாளையத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, மாணிக்கம்நத்தம் ஊராட்சியில் கபிலர்மலை சாலை முதல் செம்மடைக்காடு வரை ரூ.16 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி மற்றும் பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

இதேபோல் கபிலர்மலை ஒன்றியம், கபிலக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சீத்தக்காட்டுப்புதூர் பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் தார்சாலை, பாண்டமங்கலம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை செய்து பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. பரமத்தி நகர செயலாளர் சுகுமார், மாணிக்கநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி, கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் பானுமதி பாலகிருஷ்ணன், மாவட்ட ஆவின் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, வெங்கரை பேரூராட்சி தலைவர் விஜயகுமார், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இன்பத்தமிழரசி மற்றும் ஐ.டி.விங் செயலாளர் குணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story