பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ரூ.56 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை


பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ரூ.56 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை
x
தினத்தந்தி 10 Jun 2023 1:00 AM IST (Updated: 10 Jun 2023 7:46 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி ஆகிய இடங்களில் தலா ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு மைய கட்டிடங்கள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி மாரியம்மன் கோவில் அருகில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய திட்டப்பணிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலைவாணி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர், பசுபதி, மதிவாணன், முருகன், நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, செல்வம், மகாலிங்கம், நகர செயலாளர்கள் தென்னரசு, சந்தோஷ், பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story