ரூ.6.17 கோடியில் புதிய சாலைகள் அமைக்க பூமி பூஜை
வள்ளியூரில் ரூ.6.17 கோடியில் புதிய சாலைகள் அமைக்க பூமி பூஜை நடந்தது.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
கிராம சாலைகள் மேம்பாடு திட்டம் 2022-2023 படி வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட தெற்கு வள்ளியூர், அடங்கார்குளம், வடக்கன்குளம், பழவூர், கருங்குளம், செட்டிகுளம், சிதம்பராபுரம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.6.17 கோடியில் புதிதாக சாலை அமைக்கும் பூமி பூஜை நடைபெற்றது. வள்ளியூர் யூனியன் தலைவரும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளரும் சேவியர் செல்வராஜா இந்த பணிகளை தொடங்கி வைத்தார். யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், முத்தையா, பொறியாளர் கணபதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தெற்கு வள்ளியூர் முத்தரசி ரெகுபால், பழவூர் சுப்புலட்சுமி, கருங்குளம் ருக்கு சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story