பாலக்கோட்டில் கோவில் நுழைவுவாயில் அமைக்க எதிர்ப்புஇருசமூகத்தினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

பாலக்கோட்டில் கோவில் நுழைவுவாயில் அமைக்க எதிர்ப்புஇருசமூகத்தினர் வாக்குவாதத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Sept 2023 1:00 AM IST (Updated: 19 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோட்டில் வேணுகோபால சாமி கோவில் நுழைவுவாயில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இருசமூகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோட்டில் வேணுகோபால சாமி கோவில் நுழைவுவாயில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இருசமூகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் நுழைவுவாயில்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்டை தெருவில் பழமை வாய்ந்த வேணுகோபால சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரதான நுழைவு வாயில் பழுதடைந்தது. இதையடுத்து கோவில் அறங்காவலர் குழுவினர் புதிய நுழைவுவாயில் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த மாதம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்கனவே நுழைவுவாயில் எப்படி இருந்ததோ அதே போன்று கட்டி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் நுழைவுவாயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் நேற்று காலை கோவிலில் நுழைவுவாயில் அமைக்கக்கூடாது என மீண்டும் அப்பகுதியை சேர்ந்த அந்த சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மற்றொரு சமூகத்தினர் அங்கு திரண்டனர். இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருசமூகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மீண்டும் உதவி கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடு செய்யப்படும். அதுவரை கட்டுமான பணியை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து இரு சமூகத்தினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பழமை வாய்ந்த வேணுகோபால சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரதான நுழைவு வாயில் பழுதடைந்தது. இதையடுத்து கோவில் அறங்காவலர் குழுவினர் புதிய நுழைவுவாயில் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Next Story