பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
x

அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.

வேலூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூர் பிரிவின் சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

காட்பாடி பிரம்மபுரம் சிருஷ்டி பள்ளியில் இருந்து சேவூர் வரை நடந்த போட்டியில் 13 முதல் 17 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) நோயலின் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில், முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1 More update

Next Story