மழைநீர் சேகரிப்பு வசதியுடன் சைக்கிள் பாதை அமைப்பு


மழைநீர் சேகரிப்பு வசதியுடன் சைக்கிள் பாதை அமைப்பு
x

கோவை ரேஸ்கோர்சில் மழைநீர் சேகரிப்பு வசதியுடன் சைக்கிள் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

கோயம்புத்தூர்

கோவை

கோவை ரேஸ்கோர்சில் மழைநீர் சேகரிப்பு வசதியுடன் சைக்கிள் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள ரேஸ்கோர்சில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இங்கு மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில் ரேஸ்கோர்ஸ் நடைபாதையை மேம்படுத்தும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

அதன்படி 2.6 கிலோ மீட்டர் நீளமுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை மாதிரி சாலையாக சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அதன் இருபுறமும் சைக்கிள்கள் மட்டும் செல்ல தனிப்பாதை அமைக்கப்படுகிறது.

அதில் மழைநீர் சேகரிப்பு வசதியும் செய்யப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மின்னொளி கோபுரம்

ேஸ்கோர்ஸ் நடைபாதை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப் பட்டு வருகிறது. இங்கு இரவில் ஜொலிக்கும் வகையில் 40 அடி உயர அலங்கார மின்விளக்கு கோபுரம் அமைக்கப்படுகிறது.

மேலும் தாமஸ் பார்க்கில் மீடியா ட்ரி அமைக்கப்பட உள்ளது. அதன் உச்சியில் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டு இயற்கை காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

மாதிரி சாலையின் இருபுறமும் சைக்கிள் பாதை அமைக்கப்படு கிறது. மேலும் அங்கு அந்த நடைபாதையின் கீழ் மழைநீர் வழிந்தோடி சேகரமாகும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

இதன் மூலம் மழைநீர் நடைபாதையில் தேங்காது. மேலும் மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்படும் என்றனர்.


Next Story