பாட்னா ரெயில் நிலையத்தில் ஆபாச படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி


பாட்னா ரெயில் நிலையத்தில் ஆபாச படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 March 2023 4:54 PM IST (Updated: 20 March 2023 4:55 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலம் பாட்னா ரெயில் நிலைய பிளாட்பாத்தில் உள்ள எல்இடி திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னா ரெயில் நிலைய பிளாட்பாத்தில் உள்ள எல்இடி திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ சுமார் 3 நிமிடங்களுக்கு பிளே ஆகி உள்ளது. பயணிகள் சிலர் இதை தங்கள் செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.

அந்த பிளாட்பாரத்தில் நின்றிருந்த பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் வேகமாக சென்று அந்த வீடியோவை ஆப் செய்தனர். அதன்பின்னர், செல்போன்களில் பயணிகள் சிலரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது.

முதல்வர் நிதிஷ் குமாரையும், ரெயில்வே மந்திரியையும் பயனர்கள் டேக் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்யத் தொடங்கினர். ரெயில் நிலைய எல்இடி திரைகளில் விளம்பரம் மற்றும் ரெயில்வே மற்றும் பொது தகவல்களை ஒளிபரப்பும் ஏஜென்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story