பீகார் யூடியூபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது...!
பீகார் யூடியூபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
சென்னை,
வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறை மணீஷ் காஷ்யப் உட்பட 4 பேர் மீது முதல் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை எஸ்.பி. சிவபிரசாத் அறிவித்துள்ளார். பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மனீஷ் காஷ்யப் விசாரணைக்காக மதுரை அழைத்துவரப்பட்டார். வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணீஷ் காஷ்யப்-ஐ ஏப்ரல் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story