கீரம்பூர் அருகேஅனுமதியின்றி நடந்த மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிபோலீசார் விசாரணை


கீரம்பூர் அருகேஅனுமதியின்றி நடந்த மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சிபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2023 6:45 PM GMT (Updated: 8 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

நாமக்கல்லில் தனியார் கிளப்பை சேர்ந்தவர்கள் கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து நேற்று காலை அந்த பகுதியில் மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிலர் மோட்டார்சைக்கிளை தூக்கி அந்தரத்தில் பறந்தும், ஒற்றை சக்கரத்தில் மோட்டார் சைக்கிளை தூக்கி வீலிங் செய்தும், கைகளை விட்டப்படி ஓட்டியும் சாகசம் செய்தனர்..

இதனை பார்க்க சென்றவர்களுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்ச்சிக்கு போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பரமத்தி போலீசார் கூறுகையில், சாகச நிகழ்ச்சி நடக்கும் பகுதி பரமத்தி போலீஸ் நிலைய எல்லைகுட்பட்டது என்றும், மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி பெறவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story